வினாயகர் சதுர்த்திக்கு எங்கள் வீட்டு சமையல் SUNDAL 2 TYPES
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையான பொருள்கள்
கொண்டைக் கடலை = 1/2 கப் (குறைந்தது 4 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்)
தேங்காய் துருவல் = 1/4 கப்
பெரிய வெங்காயம் = 1
பச்சை மிளகாய் = 1
நல்லெண்ணெய் = 2 ஸ்பூன்
கடுகு = 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு
செய்முறை
1. ஊறவைத்த கொண்டைக் கடலையை குக்கரில் போட்டு 4 விசில் வேக வைக்கவும்.
2. கடாய் வைத்து நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு சேர்க்கவும்.
3. கடுகு பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பின்னர் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
6. நன்கு வதக்கவும்.
7. துருவிய தேங்காயை சேர்த்து கிளரிக் கொள்ளவும்.
8. கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கிக் கொள்ளவும்.
சுவையான கொண்டைக் கடலை சுண்டல் தயார்.
*****************************************************************************
Buying guide for sundal
https://amzn.to/2Ed2zwP
https://amzn.to/3aOiPAb
https://amzn.to/2Yjmm4I
****************************************************************************
ராஜ்மா சுண்டல்
தேவையான பொருள்கள்
ராஜ்மா = 1 கப் (குறைந்தது 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்)
தேங்காய் துருவல் = 1/4 கப்
பெரிய வெங்காயம் = 1
பச்சை மிளகாய் = 2
நல்லெண்ணெய் = 2 ஸ்பூன்
கடுகு = 1/4 ஸ்பூன்
உளுந்து = 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு
செய்முறை
1. ஊறவைத்த ராஜ்மா சுண்டலை குக்கரில் போட்டு 4 விசில் வேக வைக்கவும்.
2. கடாய் வைத்து நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு, உளுந்து சேர்க்கவும்.
3. கடுகு பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பின்னர் வேக வைத்த ராஜ்மா சுண்டலை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
6. நன்கு வதக்கவும்.
7. துருவிய தேங்காயை சேர்த்து கிளரிக் கொள்ளவும்.
8. கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கிக் கொள்ளவும்.
சுவையான ராஜ்மா சுண்டல் தயார்.
*************************************************************************
Comments
Post a Comment
Please enter your comments