வினாயகர் சதுர்த்திக்கு எங்கள் வீட்டு சமையல் KOLUKKATTAI 3 TYPES
1. பிடி கொழுக்கட்டை
தேவையான பொருள்கள்
சிவப்பு அவல் = பொடித்தது 1 கப்
நல்ல வெல்லம் = 1/2 கப் துருவியது
தேங்காய் = 1/2 கப் துருவியது.
ஏலக்காய் = பொடித்தது 1/2 ஸ்பூன்
உப்பு = 1 சிட்டிகை
செய்முறை
1 . மேலே கூறிய பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து கலந்து கொள்ளவும்.
2. கலக்கும் போது சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
3. ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொள்ளவும்.
4. கொழுக்கட்டை பதத்திற்கு கையிலேயே அழுத்தி பிடித்துக் கொள்ளவும்.
5. பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து நன்கு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, இனிமையான பிடி கொழுக்கட்டை தயார்.!
*********************************************************************
Those who are unable to make batter can buy from below links:
https://www.amazon.in/s?k=kolukkattai&i=kitchen&camp=3638&creative=24630&linkCode=ur2&linkId=b00c0d6c64c72300145cfe&tag=queenskitchen-21
Moulds:
https://amzn.to/2FD60gA
https://amzn.to/2FBSYQq
https://amzn.to/2YlpHQt
****************************************************
2. கார கொழுக்கட்டை
தேவையான பொருள்கள்
அரிசி மாவு = 1 கப்
தாளிப்புக்கு
சீரகம் = 1/4 ஸ்பூன்
கடுகு = 1/4 ஸ்பூன்
உளுந்து = 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு = 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் = 2 ஸ்பூன்
நெய் = 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 1
பெரிய வெங்காயம் = 1
கொத்து மல்லி, கறிவேப்பிலை
உப்பு
செய்முறை
1. கடாயில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் மற்றும் நெய் 1 ஸ்பூன் போட்டு, சீரகம், கடுகு, உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
2. நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. தண்ணீரை கொதிக்க வைத்து ஊற்றவும். 1 கப் மாவு அதில் சேர்க்கவும், கலக்கும் போது தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றிக் கொள்ளவும். சுமார் 2 கப் தண்ணீர் வரும்.
4. கட்டி படாமல் கலந்தது கொள்ளவும்.
5. கிண்டும் போது பாதி வெந்த்து விடும்.
6. பின்னர் இறக்கவும்.
7. கை பொறுக்கும் சூடு வந்தவுடன், கையில் அளவுடன் கொழுக்கட்டை பிடித்துக் கொள்ளவும்.
8. பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து நன்கு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, கார கொழுக்கட்டை தயார்.!
*********************************************************************
3. பூரண கொழுக்கட்டை
==================
தேவையான பொருள்கள்
அரிசி மாவு = 1 கப்
நெய் = தேவையான அளவு
உப்பு = 1 சிட்டிகை
தேங்காய் துருவல் = 1 கப்
நல்ல வெல்லம் = 1/2 கப் துருவியது
எள் = 3 ஸ்பூன்
வேர்க்கடலை = 3 ஸ்பூன்
ஏலக்காய் பொடி = 1/4 ஸ்பூன்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு சுடு நீர் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சிறிது நெய்யும் சேர்த்துக் கொள்ளவும்.
2. கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும். அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
4. தேங்காய் துருவல் போட்டு ஈரத்தன்மை போக வறுக்கவும்.
5. வெல்லத்துருவல் சேர்த்து வதக்கவும்.
6. எள், வேர்க்கடலை பொடித்துக்கொள்ளவும். பின்னர் அதை கடாயில் சேர்க்கவும்.
7. ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
8. நன்கு கிளறவும், தேவைப்பட்டால் நெய் சேர்க்கவும்,
9. நன்கு வதங்கிய பிறகு இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.
10. அரிசி மாவை சிறு பந்தாக உருட்டி சிறிய கப் போல் செய்து நடுவில் அளவாக பூரணத்தை வைத்து மூடிக்கொள்ளவும்.
11. அது போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.
12. பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து நன்கு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, இனிப்பான பூரண கொழுக்கட்டை தயார்.!
******************************************************************************
Comments
Post a Comment
Please enter your comments